undefined

 அனைத்து கிரக தோஷ நிவர்த்திக்கும் தினசரி வாழ்க்கையில் செய்ய வேண்டியவை! 

 
 

கிரக தோஷங்கள் என்பது நம் சொந்த கர்ம விளைவுகளாகும். எப்படிச் சாப்பிடக் கூடாததைச் சாப்பிட்டால் வயிறு பாதிக்கும், மழையில் நனையும்போது ஜலதோஷம் வரும், அதுபோல் நாம் செய்த தீய செயல் நம்மைத் துன்புறுத்தும். அதனால் முதலில், மீண்டும் அதே தவறை செய்யாமல் இருப்பது முக்கியம். தவறான செயல்களில் ஈடுபடாமல், நற்பண்புடன் வாழ்வதே கிரக தோஷ நிவர்த்திக்கான முதல் படியாகும்.

இரண்டாவதாக, வழிபாடு மிக அவசியம். நவகிரகங்களின் கிருபை பெற நவகிரக காயத்ரி மந்திரங்களை தினமும் சொல்லலாம். இந்த மந்திரங்கள் அனைத்து பஞ்சாங்கங்களிலும் வழங்கப்பட்டிருக்கும். அவற்றை பக்தியுடன் பாராயணம் செய்தால் கிரக தோஷங்கள் குறையும். ஆனால் எந்த நவகிரக மந்திரத்தையும் சொல்லும் முன், நமது இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தின் பெயரை ஜபிப்பது அவசியம்.

ஆலயங்களுக்கு செல்லும் போது முதலில் பிரதான தெய்வத்தை வணங்கி விட்டுதான் நவகிரகங்களை வணங்க வேண்டும். இதை மனதில் நிறுத்திக் கொண்டால் கிரகங்கள் தங்களது தீய விளைவுகளை விலக்கி, நமக்கு சுபபலன்களை வழங்கும். ஒழுக்கம், பக்தி, மன அமைதி – இவை மூன்றும் ஒன்றிணைந்தால் கிரக தோஷங்கள் தாமாகவே நீங்கும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!