திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு!

 

 ஆடி அமாவாசை திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலானது வழக்கத்திற்கு மாறாக சுமார் 100 அடி தூரம் வரை உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிவதால் பக்தர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இருப்பினும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து புனித நீராடவும் பக்தர்களுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கடலின் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.