தவெக உடன் கூட்டணி... திருமா அறிவிப்பால் ஸ்டாலின் அதிர்ச்சி!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன், இனி தவெகவுடன் தொடர்ந்து பயணிக்கவுள்ளதாக வெளிப்படையாக அறிவித்தார். தவெக அரசில் விசிக இடம்பெற்றிருந்தாலும் கூட்டணி குறித்த தெளிவான நிலைப்பாட்டை அவர் இதுவரை அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தார். இதனால் விசிக எந்நேரத்திலும் தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுவிட்டுத் திமுக கூட்டணிக்குச் செல்லும் என்ற அரசியல் பேச்சுக்கள் தீவிரமாக நிலவி வந்தது.
தலைவர் திருமாவளவனின் இந்த திடீர் அறிவிப்பின் மூலமாக அந்த வதரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதோடு திமுக தலைமைக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி தரப்பட்டுள்ளது. நீண்ட காலமாகத் தொடர்ந்த வந்த பல்வேறு யூகங்களுக்கும் கேள்விகளுக்கும் இந்த மாநாட்டின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் உள்ள முக்கியத் தலைவர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் தமிழக அரசியல் களம் எத்தகைய திருப்பங்களைச் சந்திக்கப் போகிறது என்பதை அறிய அரசியல் ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கூட்டணி கணக்குகளில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் அடுத்தடுத்த தேர்தல்களில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியை மேலும் பலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவிற்குத் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.