அண்ணா சிலையிடம் காதில் ரகசியம் சொன்ன நபர்! கன்னத்தில் முத்தமிட்ட விநோதக் காட்சி வைரல்

 

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பேரறிஞர் அண்ணாவின் சிலையிடம் நடந்துகொண்ட விதம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பத்தூர் நகரில் சிவகங்கை செல்லும் சாலையில் அண்ணாவின் உருவச் சிலை அமைந்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அங்கு வந்த மதுபோதையில் இருந்த நபர், திடீரென சிலை அமைந்துள்ள பீடத்தின் மீது ஏறியுள்ளார்.

பின்னர் சிலையின் அருகே சென்ற அவர், அண்ணாவின் காதருகே சென்று ஏதோ ரகசியம் சொல்வதுபோல் கிசுகிசுத்துள்ளார். தொடர்ந்து சிலையின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த விநோதமான செயல்களை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அண்ணா சிலையிடம் அவர் என்ன ரகசியம் கூறியிருப்பார் என்ற கேள்வியுடன் இணையவாசிகள் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.