திருவள்ளூரில் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் திடீர் உயிரிழப்பு... பறவைக் காய்ச்சலா? !
Nov 18, 2026, 11:50 IST
திருவள்ளூர் மாவட்டம் வடதில்லை பகுதியில் உள்ள வெங்கடேசனுக்கு சொந்தமான வாத்து பண்ணையில், 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் அடுத்தடுத்து திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்த திடீர் உயிரிழப்புகளுக்குப் பறவைக் காய்ச்சல் (Bird Flu) ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தகவல் அறிந்தவுடன் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிரிழந்த வாத்துகளின் மாதிரிகளை (Samples) அவர்கள் பாதுகாப்பாகச் சேகரித்துள்ளனர்.
இந்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், நோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.