சூப்பர் ஐடியா... திருவாண்ணாமலை திருவிழாவில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய கைகளில் டேக்!
திருவண்ணாமலையில் மலை மேல் தீபம் ஏற்றும் நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். கொட்டும் மழையில் கொப்பரை தீபம் மலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.
தீப மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வை காண மலைமீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை . சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் வசதிக்காக பேருந்து , தங்குமிடம், உணவு, குடிநீர் என பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், திருவண்ணாமலைக்கு பக்தர்களுடன் வரும் குழந்தைகள் தொலைந்து விட கூடாது என அதனை தடுக்கும் நோக்கில் குழந்தையின் பெயர், முகவரி , பெற்றோரின் தொலைபேசி எண் ஆகியவை அடங்கிய டேக் ஒன்று குழந்தைகளின் கையில் கட்டப்படுகிறது. இதனால் கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போய்விட்டால் அவர்களை கண்டறிய இந்த டேக் உதவும் என காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்தர்களுக்கு உணவு வழங்கும் பொருட்டு மலை அடிவாரத்தில் கிரிவல பாதையில் சுமார் 250க்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான கூடத்தில் அமைச்சர் எ.வ.வேலு அன்னதானத்தை பக்தர்களுக்கு அளித்து தொடங்கி வைத்தார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!