மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் !
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்குச் செல்கிறார். அங்குள்ள புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் சென்று அவர் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்திற்கும் அவர் நேரில் செல்கிறார். அங்கு நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் ஆன்மிக வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். அமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து அவர் கார் மூலம் புதுச்சேரிக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு காவல்துறை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு அரசுப் பணிகளைப் பார்வையிட உள்ளார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.