ஸ்டாலின் செய்த பெரிய தப்பு இது தான்! - திமுக எம்.பி. வில்சன் விமர்சனம்!

 

கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்யைக் கைது செய்யாதது தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்த பெரும் தவறு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் வில்சன், கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்யைக் கைது செய்யாமல் விட்டதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு என அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

மிசா கொடுமைகளைக் கேலி செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பிய அவர், கடந்த 2013-ஆம் ஆண்டில் தனது தந்தையுடன் கொடநாடு சென்றதும், 2020-ஆம் ஆண்டில் தனது பட வெளியீட்டிற்காக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததும் விஜய்க்கு நினைவில்லையா என்றும் வினவியுள்ளார்.

முதலமைச்சராக இருக்கும் விஜய் தனது நாகரிகமற்ற நடத்தையை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வில்சன் தனது பதிவில் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.