இந்த 3 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோக காலம் இது... வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கோங்க! 

 

மேஷம் 
இன்று உங்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் நன்னாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகளும் லாபமும் கிட்டும். குடும்பத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9 | அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம் 
இன்று திட்டமிட்ட காரியங்களில் சிறு தாமதங்கள் ஏற்படலாம் என்பதால் நிதானம் அவசியம். நிதி விஷயங்களில் கவனமாக இருப்பதும், புதிய முதலீடுகளைத் தவிர்ப்பதும் நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மாலையில் நல்ல செய்தி ஒன்று தேடி வரும்.

அதிர்ஷ்ட எண்: 6 | அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்
உங்கள் சுறுசுறுப்பும் திறமையும் வெளிப்படும் நாள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளைச் சிறப்புடன் முடித்துக் காட்டுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்ப உண்டு.

அதிர்ஷ்ட எண்: 5 | அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்
இன்று உங்களுக்குச் சாதகமான சூழல் நிலவும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகளும் அதிகாரங்களும் கூடும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2 | அதிர்ஷ்ட நிறம்: பாலேடு

சிம்மம்
மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட எண்: 1 | அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

கன்னி 
வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொலைதூரத்திலிருந்து சுபச்செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும்.

அதிர்ஷ்ட எண்: 5 | அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

துலாம்
இன்று உங்களுக்குச் சந்தோஷமும் திருப்தியும் நிறைந்த நாளாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுகள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட எண்: 7 | அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம் 
எதிர்பாராத தனலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பூரணமாகக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 9 | அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

தனுசு 
இன்று பிள்ளைகளின் வழியில் நல்ல செய்திகளைக் கேட்டு மகிழ்வீர்கள். குடும்பப் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றுவீர்கள். தொழில் போட்டி குறையும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்: 3 | அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்
சுபச் செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமையும். தாய் வழியில் நன்மைகளும் ஆதரவும் கிடைக்கும். வீடு, வாகனம் பராமரிப்புச் செலவுகள் வரக்கூடும். வேலைதேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வர வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட எண்: 8 | அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்
இன்று உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன்கள் உடனடியாகக் கிடைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். சகோதர வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குறுகிய காலப் பயணங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8 | அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மீனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நன்னாள். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும். பேச்சில் இனிமையைக் கையாள்வதன் மூலம் புதிய வாய்ப்புகளையும் வெற்றிகளையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3 | அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்