1,405 தெருநாய்களுக்கு தடுப்பூசி, 331 நாய்களுக்கு கருத்தடை - தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை!

 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், வெறிநோய் பரவுவதைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில், மொத்தம் 1,405 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 331 நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, அவற்றுக்குத் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் அனைத்தும் எந்தவிதப் பாதிப்பும் இன்றி, பாதுகாப்பாக அவை பிடிக்கப்பட்ட அதே இடங்களிலேயே மீண்டும் விடப்பட்டன.

தெருநாய்கள் தொல்லை அல்லது அது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க பொதுமக்கள் 1800 203 0401 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.