பட்டாசு விற்கும் ரோபோ! ஒரு கிலோ சேர்ந்ததும் எச்சரிக்கை... சிறுவர்கள் உற்சாகம்!

 

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையில் வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடியில் ரோபோ மூலம் பட்டாசு விற்பனை செய்யும் புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசுக் கடையில் இந்த வித்தியாசமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பின்னால் கூடையுடன் செல்லும் ரோபோ, அவர்கள் தேர்வு செய்யும் பட்டாசுகளை கூடையில் சேகரிக்கிறது.

கூடையில் ஒரு கிலோ அளவுக்கு பட்டாசுகள் சேர்ந்ததும், அதற்கான அறிவுறுத்தலை வழங்கும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடைக்கு வரும் சிறுவர்கள் இந்த ரோபோவை ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர். வாடிக்கையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ள இந்தத் தொழில்நுட்ப முயற்சி, தூத்துக்குடியில் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாரம்பரியமான பட்டாசு விற்பனையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ள இந்தப் புதுமையான முயற்சி அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.