அதிகாலையிலேயே திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்... ஒரே நாளில் 102 ஜோடிகளுக்குத் திருமணம் - கோயில் நிர்வாகத்திற்கு ரூ.4.59 லட்சம் வருவாய்!

 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுபமுகூர்த்த நாளான இன்று ஒரே நாளில் 102 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருப்பரங்குன்றம் கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். 

இக்கோயிலில் முதல் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், திருமணத்திற்குக் குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜோடிக்குத் திருமணக் கட்டணமாக ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் கோயில் நிர்வாகத்திற்குத் தோராயமாக திருமண முன்பதிவில் மட்டுமே ரூ.4.59 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.