இன்றிரவு 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழைச் சூழல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு முக்கிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தேனி, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று இரவு 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழைக் காலத்தில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.