தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
Sep 3, 2026, 19:00 IST
தமிழகத்தில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.