இன்றிரவு தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - பத்திரம் மக்களே!

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி வரை மாநிலத்தின் 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சேலம், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தர்மபுரி, ஈரோடு, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், மதுரை, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி அல்லது பருவநிலை மாற்றம் காரணமாக, இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.