19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை - வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்!

 

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு 7 மணி வரை கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

அதேபோல், தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களான கோவை, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர். ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அந்த மாவட்டங்கள்:

மழை பெய்யும் மாவட்டங்களில் ஒருபுறம் குளிர்ச்சி நிலவினாலும், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 38-39° செல்ஸியஸ் வரை பதிவாகக்கூடும் என்பதால், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் ஒருவித அசௌகரியமான சூழல் (Humidity) நிலவும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மழை பெய்யும் சமயத்தில் இடி மற்றும் மின்னல் தாக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் திறந்தவெளிகளிலும் மரங்களுக்கு அடியிலும் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.