undefined

அடங்காத பொண்ணு நான்... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரவுடி பேபி சூர்யா!
 

 

ஆபாசமாக பேசி வருவதாக புகார் எழுந்ததை அடுத்து ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலரை மதுரையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தியாவில் டிக்டாக் செயலி பயன்பாட்டில் இருக்கையில், அதில் பிரபலமான யூஸராக வலம் வந்தவர் சூர்யா. ரவுடி பேபி சூர்யா என்கிற பெயரில் அக்கவுண்ட் வைத்திருந்த இவருக்கு பல ஃபோலோயர்ஸுகள் இருந்தனர். 

அதன்மூலம் யூ-ட்யூப் சேனல்களில் நேர்காணல்கள், கேம் ஷோவில் பங்கேற்பு என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று மேலும் பிரபலமானார். டிக்டாக் செயலி தடைக்கு பிறகு இவர் என்ன அனார் என்றே தெரியாமல் இருந்தது.

சமீபத்தில் திருச்சியில் நடந்த ரெய்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சூர்யாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகள் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார். அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்துள்ள புகாரில் சமூக ஊடகங்களில் ஆபாசமாக வீடியோ வெளியிடுவதாக ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் மீது புகார் அளித்தார்.

அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையில், மதுரையில் பதுங்கி இருந்த இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.