காலம் பேசாது... ஆனா காத்திருந்து பதில் சொல்லும் - ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு ரஜினிகாந்த் பதில்!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது அரசியல் பயணம் குறித்துத் தெரிவித்த கருத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் திரையுலகினருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். "காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!! என்று கூறியுள்ளார்.