திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு.. 5.76 லட்சம் பக்தர்கள் தரிசனம் - ரூ.28.94 கோடி உண்டியல் வருமானம்!

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நிறைவடைந்த நிலையில், கடந்த 8 நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

திருப்பதியில் கடந்த எட்டு நாட்களாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவின் போது பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த சுமார் 5.76 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானைச் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்கள் கோயிலில் செலுத்திய காணிக்கை மூலம் மொத்தம் 28 கோடியே 94 இலட்ச ரூபாய் உண்டியல் வருமானமாகக் கிடைத்துள்ளதாகத் தேவஸ்தான நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. விழா நடைபெற்ற இந்த நாட்களில் மட்டும் சுமார் 33 லட்சம் திருப்பதி லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.