பயங்கர விபத்து! பள்ளம் தோண்டும் பணியில் கிரேன் கவிழ்ந்து பொறியாளர் உள்பட 3 பேர் பலி!

 

 

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கட்டுமானப் பணியின்போது கிரேன் கவிழ்ந்த விபத்தில் பொறியாளர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.திருப்பதியில் 30 அடி ஆழம் கொண்ட பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

allowfullscreen

அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் கவிழ்ந்து அங்கு பணியில் இருந்த ராமராவ் (45), பொறியாளர் சந்தீப் (34) மற்றும் செங்கையா (40) ஆகிய 3 பேர் மீது விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் மூவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் மீட்புப் பணியினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரேன் எந்த காரணத்தால் கவிழ்ந்தது, கட்டுமானப் பணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டிருந்தனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.திருப்பதியில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட இந்த விபத்தில் பொறியாளர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.