திருப்பதி பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தேதிகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு பிரிவுகளின் கீழ் டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன: நவம்பர் 18 ஆன்லைன் குலுக்கல் முறைக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் முன்பதிவு தொடங்குகிறது.
நவம்பர் 21ம் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட பல்வேறு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
நவம்பர் 23ம் தேதி ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும்.
நவம்பர் 24ம் தேதி பக்தர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நவம்பர் 24-ஆம் தேதி காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
தரிசன டிக்கெட்டுகள் மற்றும் திருமலை, திருப்பதியில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (ttdevasthanams.ap.gov.in) அல்லது மொபைல் செயலி வழியாக மட்டுமே முன்பதிவு செய்துகொள்ளுமாறு தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.