திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாத விழாக்கள் அறிவிப்பு - தேவஸ்தானம் தகவல்!

 

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில்களில் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள முக்கிய உற்சவங்கள் மற்றும் விழாக்கள் குறித்த அட்டவணையைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயில் விழாக்கள்:

அக்டோபர் 12: நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலமாகத் தொடங்குகிறது.

அக்டோபர் 16: பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெறுகிறது.

அக்டோபர் 20: தீர்த்தவாரி எனப்படும் சக்கர ஸ்நானம் நடைபெறுகிறது.

அக்டோபர் 26: பவுர்ணமியை முன்னிட்டு பவுர்ணமி கருட சேவை நடைபெறவுள்ளது.

கோவிந்தராஜ சுவாமி கோயில் விழாக்கள்:

அக்டோபர் 11 முதல் 20 வரை: வேதாந்த தேசிகர் உற்சவம் சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

அக்டோபர் 20: விஜயதசமியை முன்னிட்டுப் பாரவேட்டை உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.