திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூல்!
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகமாக உள்ள நிலையில், ஒரே நாளில் பதிவான உண்டியல் காணிக்கை மற்றும் தரிசன விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 77,568 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் நேர்த்திக்கடன் மூலம் ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.19 கோடி வசூலாகியுள்ளது.
அன்று ஒரு நாளில் மட்டும் 35,033 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக 4.15 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், 2.38 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.
இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த நிலையில், சுமார் 22 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.