திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.72 கோடி உண்டியல் வசூல்!

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூ.4.72 கோடி வசூலாகியுள்ளதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மொத்தம் 77,394 பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் செலுத்திய நேர்த்திக்கடன் மூலம் உண்டியலில் ரூ.4.72 கோடி காணிக்கையாக வசூலாகியுள்ளது. 31,129 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 4.09 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன. மேலும், 2.37 லட்சம் பக்தர்களுக்கு இலவச அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. நேரடி இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் இல்லாமல் வந்த பக்தர்கள், ஏழுமலையானைத் தரிசனம் செய்யக் வைகுந்தம் காத்திருப்பு அறைகளில் சுமார் 18 மணி நேரம் வரை காத்திருந்ததாகக் கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.