திருவள்ளூர்: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி முதியவர் பலி - வாலிபர்களுக்குப் பொதுமக்கள் தர்ம அடி!

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் போதையில் இருந்த வடமாநில வாலிபர்கள் ஓட்டி வந்த கார் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்பkது எதிர்பாராதவிதமாக அந்த நபர் மீது கார் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்தியதோடு அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்தப் போதை ஆசாமிகளை அப்பகுதி பொதுமக்கள் சுற்றி வளைத்துப் பிடித்துத் தர்ம அடி கொடுத்ததுடன், பின்னர் அவர்களைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விபத்து நடந்த இடத்திற்குப் காவல்துறையினர் தாமதமாக வந்ததாகக் கூறி ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.