திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் தரிசனம்!

 

திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட மலை சுற்றும் பாதையில் கிரிவலம் மேற்கொண்டனர்.

திருவண்ணாமலையில் பௌர்ணமி திதி காலை 9.53 மணிக்குத் தொடங்கியதை அடுத்து, ஆன்மீக பக்தர்கள் கிரிவலப் பாதையில் குவிந்தனர்.

பகல் நேர வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் அஷ்ட லிங்க கோயில்களிலும், அருணாசலேஸ்வரர் கோயிலிலும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மாலை வேளையில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

கிரிவலப் பாதையில் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.