TNEA 2026: என்ஜினியரிங் எலக்ட்ரானிக், EEE, மெக்கானிக்கல் பொறியியல் படிப்புகளுக்குச் சிறந்த கல்லூரிகள்!

 

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்குக் கணினி அறிவியல்,  ஐடி துறைகளுக்கு இணையான வாய்ப்புகளையும், வேலைவாய்ப்பு நிலைத்தன்மையையும் வழங்கும் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படிப்புகள் மிக முக்கியத் தேர்வாக விளங்குகின்றன.

இத்துறை படிப்புகளுக்குத் சிறந்த கட்டமைப்பு, ஆய்வக வசதிகள் மற்றும் சிறந்த 'கோர்' நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை வழங்கும் தமிழகத்தின் முன்னணி பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது:

அண்ணா பல்கலைக்கழகம் EEE மற்றும் மெக்கானிக்கல் ஆகிய இரு துறைகளுக்கும் இந்தியாவின் முதன்மைத் தேர்வாக விளங்குகிறது. முன்னணி பொதுத்துறை மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நேர்காணலுக்கு வருகின்றன.

MIT சென்னை மெக்கானிக்கல் மற்றும் தயாரிப்புத் துறை படிப்புகளுக்குப் புகழ்பெற்ற கல்லூரி. அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி வசதிகள் கொண்டவை.

GCT கோயம்புத்தூர் (Government College of Technology) மேற்கு மண்டலத்தில் அரசுப் பொறியியல் கல்லூரிகளில் EEE மற்றும் மெக்கானிக்கல் படிப்புகளுக்கு மிக அதிக கட்-ஆஃப் கேட்கப்படும் கல்லூரி.

GCE சேலம் மற்றும் ACCET காரைக்குடி: Core நிறுவனப் வேலைவாய்ப்புகளுக்கும், GATE போன்ற உயர்கல்வித் தேர்வுகளுக்கும் சிறந்த பயிற்சி அளிக்கும் அரசுக் கல்லூரிகள்.

அரசு உதவிபெறும் மற்றும் தன்னாட்சி பெற்ற தனியார் கல்லூரிகள்

PSG காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை - EEE, மெக்கானிக்கல் மற்றும் சாண்ட்விச் கோர்ஸ்களுக்குத் தென்னிந்தியாவிலேயே தலைசிறந்த தனியார் கல்லூரி. சொந்தத் தொழிற்சாலை வளாகத்துடன் கூடிய நடைமுறைப் பயிற்சிகள் மற்றும் நூறு சதவீத வேலைவாய்ப்பு வசதி கொண்டது.

SSN பொறியியல் கல்லூரி - சென்னை மண்டலத்தில் சிறந்த ஆராய்ச்சி வசதிகள், உயர்தர ஆய்வகங்கள் மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை வழங்கும் முதன்மைத் தனியார் கல்லூரி.

CIT கோயம்புத்தூர் - இண்டஸ்ட்ரி 4.0 மற்றும் ஆட்டோமேஷன்சார்ந்த அதிநவீனப் பாடத்திட்டங்களைக் கொண்ட பழமையான நிறுவனம்.

தியாகராஜர் பொறியியல் கல்லூரி , மதுரை - தென் மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு EEE மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் முதல் தேர்வாக விளங்கும் தன்னாட்சிக் கல்லூரி.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை - ஆட்டோமொபைல், ரோபோடிக்ஸ் மற்றும் மின்சார வாகனங்கள் சார்ந்த பயிற்சிகளுடன் கூடிய சிறந்த மெக்கானிக்கல் & EEE துறை உள்கட்டமைப்பு கொண்ட கல்லூரி.

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, சோனா தொழில்நுட்பக் கல்லூரி

EEE மற்றும் மெக்கானிக்கல் கோர்ஸ்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள், கல்லூரியின் தரவரிசைமற்றும் அங்குள்ள கோர் கம்பெனி வேலைவாய்ப்புகளை முதலில் ஆராய்ந்து சாய்ஸ் ஃபில்லிங் பட்டியலை உருவாக்க வேண்டும்.

மின்சார வாகனங்கள், ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளின் வளர்ச்சி காரணமாக, இத்துறை வல்லுநர்களுக்கான தேவை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும்.