TNPSC குரூப்-2 & 2A தேர்வுகள் - 821 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II அறிவிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மொத்தம் 821 காலிப்பணியிடங்கள் (குரூப்-2 இல் 41, குரூப்-2A இல் 780) நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் செப்டம்பர் 9, 2026 (இரவு 11:59 மணி வரை) விண்ணப்பத் திருத்தக் காலம் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 15 வரை

முதல்நிலைத் தேர்வு நாள் : நவம்பர் 1, 2026 (காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை) தகுதியுள்ள தேர்வர்கள் tnpscexams.in அல்லது tnpsc.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம் முதல்நிலைத் தேர்வுக்கு ரூ. 100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வுக் கட்டணத்தை யுபிஐ, நெட் பேங்கிங் அல்லது கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலமாக எளிதாகச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor's Degree) பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.