மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கம் விலை... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைவு!
தமிழகத்தில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.99,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த சில மாதங்களாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நீடித்து வந்த தங்கம் விலை மீண்டும் அந்த வரம்புக்கு கீழ் இறங்கியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,470-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.99,760 ஆக சரிந்துள்ளது.
தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் குறைந்திருப்பது நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.அதேநேரத்தில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.190-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் குறைந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.