undefined

 மாதக் கடைசியில் உச்சம் தொட்ட  தங்கம்!

 

 இன்று ஜூலை 31ம் தேதி புதன்கிழமை மாதத்தின் கடைசிநாளில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில்  தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனையடுத்து  சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
நேற்று ஜூலை 30ம் தேதி தங்கம் விலை  சவரனுக்கு ரூ240 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ35 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6420க்கும்,  சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.51,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ91க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ91000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.