தங்கம் விலை புதிய உச்சம்... வெள்ளி வரலாறு காணாத விலை உயர்வு!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்க மாற்றத்துடன் தொடர்கிறது. ஒரே நாளில் இரண்டு முறை விலை மாற்றம் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. நேற்று முன்தினம் காலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, சவரனுக்கு ரூ.680 அதிகரித்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.75, சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 வரை உயர்ந்தது.
இதன் விளைவாக ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று காலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,525-க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.92,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை விட வெள்ளி விலை இன்னும் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று கிராமுக்கு ரூ.5 மற்றும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு ஏற்பட்டுள்ளதால், ஒரு கிராம் ரூ.195, ஒரு கிலோ ரூ.1,95,000 என்ற விலையில் விற்பனை நடைபெறுகிறது. இதன்மூலம் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!