undefined

 2 வது நாளாக சரிந்த தங்கம் விலை... நகைப்பிரியர்கள் உற்சாகம்! 

 
 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தினம் தினம் புதுப்புது உச்சம் தொட்டு நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எகிறி ஆட்டம் காட்டிய தங்கம் விலை, நேற்று அதிரடியாக குறைந்தது. ஒரே நாளில் இருமுறை ஏற்றம் கண்ட தங்கம், அதே வேகத்தில் விலையேற்றத்திலிருந்து சரிவைச் சந்தித்தது. காலை நேரத்தில் ஒரு கிராம் ரூ.300, ஒரு பவுன் ரூ.2,400 குறைந்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.160, பவுனுக்கு ரூ.1,280 குறைந்தது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று இரண்டாவது நாளாகவும் சரிவைத் தொடர்கிறது. அதன்படி, பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,500-க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கத்தில் முதலீடு குறைந்திருப்பது இதற்குக் காரணமாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

தங்கம் விலையைப் போலவே, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.1, கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து தற்போது ஒரு கிராம் ரூ.174-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. தங்க விலை தொடர்ந்து குறைவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!