இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை.. மறந்து போய் ஏமாறாதீங்க!
Mar 31, 2026, 05:15 IST
இன்று தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 26,618 முழுநேர மற்றும் 10,710 பகுதிநேர ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரரான பகவான் மஹாவீர் பிறந்த தினத்தையொட்டி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ரேஷன் அட்டைதாரர்கள் இந்த விடுமுறை அறிவிப்பைத் தெரிந்துகொண்டு, தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கத் அதற்கேப திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மறந்துவிட்டு ரேஷன் கடைக்கு சென்று சிரமப்படாதீங்க.