undefined

இன்று ஹோலி... 100 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் அபூர்வச் சந்திர கிரகணம்!

 

இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வழக்கமான ஹோலி கொண்டாட்டங்களைத் தாண்டி, இன்றைய தினத்திற்கு வானியல் மற்றும் கலாச்சார ரீதியாகச் சில தனித்துவமான சிறப்புகள் உள்ளன. இன்றைய ஹோலி பண்டிகையின் மிக முக்கியமான சிறப்பு, 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி தினத்தில் முழுச் சந்திர கிரகணம் நிகழ்கிறது.  பௌர்ணமி தினமான

இன்று சந்திரன் 'ரத்தச் சிவப்பாக' காட்சியளிப்பதும், அது ஹோலி கொண்டாட்டத்தோடு இணைந்திருப்பதும் ஆன்மீக ரீதியாக மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த கிரகணம் சிம்ம ராசி மற்றும் பூரம் நட்சத்திரத்தில் நிகழ்வதால், இது ஒரு மிகப்பெரிய ஆற்றல் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிட ரீதியாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஹோலிக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கிரகணத்தின் 'சூதக காலம்' அதிகாலை 6:23 மணிக்கே தொடங்கி விடுவதால், பல இடங்களில் ஹோலிகா தகனம் நேற்று நள்ளிரவே முடிக்கப்பட்டது. சில பகுதிகளில் இன்று மாலை கிரகணம் முடிந்த பிறகு (இரவு 6:47-க்கு மேல்) தீ மூட்டி வழிபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹோலி என்பது பிரகலாதனைப் பாதுகாத்து, இரண்யகசிபுவை நரசிம்மர் வதம் செய்த நிகழ்வைக் குறிக்கிறது. இன்றைய சந்திர கிரகணமும் 'தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டுதல்' என்ற அதே தத்துவத்தோடு ஒத்துப்போவதால், இன்று செய்யப்படும் தியானம் மற்றும் வழிபாடுகள் பல மடங்கு பலன் தரும் எனக் கூறப்படுகிறது.

இன்று கிரகணம் இருப்பதால், ரசாயன வண்ணங்களைத் தவிர்த்து இயற்கையான 'குலால்' பொடிகளைப் பயன்படுத்துவது உடல் நலத்திற்கும், கிரகண கால உணர்திறனுக்கும்நல்லது.