இன்று ரக்‌ஷாபந்தன்... ராக்கி கயிறு கட்ட உகந்த நல்ல நேரம் இது தான்!

 

சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் முக்கியப் பண்டிகையான ரக்ஷா பந்தன் நாளில், சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டும் முறைகளும் உகந்த நேரமும் குறிக்கப்பட்டுள்ளன.

இந்து பஞ்சாங்கத்தின்படி, பௌர்ணமி திதி நாளான இன்று காலை 10.29 மணி வரை பௌர்ணமி உள்ளது. சூரிய உதயத்தைக் கணக்கிட்டு இன்று இப்பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இன்று காலை 05:57 மணி முதல் 09:48 மணிக்கும் இடைப்பட்ட நேரம் ராக்கி கயிறு கட்ட மிகவும் உகந்த நேரமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த நேரத்தைத் தவறவிட்டவர்கள் ராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை நேரங்களைத் தவிர்த்துவிட்டு மாலை வேளையிலும் கட்டலாம்.

ஒரு தட்டில் தீபம், குங்குமம், பூக்கள் மற்றும் இனிப்புகளுடன் ராக்கி கயிற்றை வைத்துக்கொள்ள வேண்டும். சகோதரரின் நெற்றியில் திலகமிட்டு, நீண்ட ஆயுள் மற்றும் நலமுடன் வாழ வாழ்த்தி அவரது வலது கை மணிக்கட்டில் கயிற்றைக் கட்டி இனிப்பு ஊட்டி மகிழலாம். பின்னர் சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாதுகாப்பாக இருக்க உறுதியளிக்கலாம்.