இன்று செல்வங்களை அள்ளித்தரும் செவ்வாய் பிரதோஷம்.. இந்த மந்திரத்தை உச்சரிக்க மறக்காதீங்க!

 

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமியை அடுத்த திரையோதசி திதியில் பிரதோஷ தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை பிரதோஷம் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 

இன்று செப்டம்பர் 8ம் தேதி  செவ்வாய் கிழமை பிரதோஷ தினமாக உதித்துள்ளது. செவ்வாய் கிழமையில் பிரதோஷ தினம் வருவதால் இந்நாளில் சிவபெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். வளமான மேன்மையான வாழ்வு பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. அனைத்து பிரதோஷங்களும் சிறப்பு தான் . இருந்த போதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷம்  கூடுதல் சிறப்பு வாய்ந்தது. 

ஒருவன் தொடர்ந்து 11 பிரதோஷ நாளில்  வழிபாடு செய்தால் துன்பங்கள் கரைந்து  எண்ணிய காரியம் ஈடேறும். இன்று செய்யும் சிவ வழிபாடு சூரியனின் அருளும், சிவ பெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும் என்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.அத்துடன்  புகழ், பெருமை, மகிழ்ச்சி, அமைதி மற்றும் நீண்ட ஆயுளும் கூடும். ஜாதகத்தில் வரும் சூரிய தோஷம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

கீழ் வரும் பிரதோஷ மந்திரத்தை உச்சரிக்க மறக்காதீங்க. சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தைப் பிரதோஷ நேரத்தில் உச்சரிப்பது அபரிமிதமாக சக்தியை உடலில் சேர்க்கும்.

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய!
நீலகண்ட்டாய சம்பவே!
அம்ருதேஸாய சரவாய!
மஹாதேவாய தே நமஹ!

இன்றைய தினம் முழுவதுமே உடல் எந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும் மனம் ‘ஓம் நமசிவாய’ என்ற எளிய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். இன்றைய தினம் விரதமிருந்து சிவனின் நினைப்பில் அவரின் நாமத்தை உச்சரித்து, மாலையில் சிவன் கோவில்களில் நடைபெறும் பிரதோஷ நிகழ்வுகளில் கலந்து கொண்டு நந்தி பகவானையும், சிவபெருமானையும் வழிபடுவது மிகவும் சிறப்பு. ஜாதகத்தில் சூரியனின் நிலை வலுப்பெற்று நல்ல ஆரோக்கியமும் செல்வமும் உண்டாகும்.

சிவபெருமானுக்கு உகந்த நாள் பிரதோஷ நாள். பிரதோஷ வேளை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் நமது கர்மவினைகள் நீங்கவும், நமது பிரார்த்தனைகள் நிறைவேறவும் வழிபாடு செய்திட மேன்மையான பலன்களை பெற முடியும்.