இன்று அய்யா வைகுண்ட தர்மபதியில் தேரோட்டம்... குவியும் பக்தர்கள்!
இன்று அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருவொற்றியூரில் குவிந்து வருகின்றனர்.
சென்னை, திருவொற்றியூர் மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி திருவிழா 10 நாட்களுக்கு மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாம கொடியை அய்யாவின் பக்தர்கள் கையில் ஏந்தியபடி பள்ளியறையை 5 முறையும், கொடிமரத்தை 5 முறையும் அய்யா அரஹர சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி வலம் வந்தனர்.
விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடைபெற்றது. இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அய்யா பதிவலம் வந்தார். விழாவின் 8ம் நாளான நேற்று அக்டோபர் 11ம் தேதி இரவு 8 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெற்றது.
இன்று அக்டோபர் 12ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வாக காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணியளவில் திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணியளவில் அய்யா திருத்தேரில் வீதியுலா வருகிறார். தேரோட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!