undefined

இன்று இறுதிப்போட்டி... மகளிர் ஜூனியர் ஆசிய ஆக்கியில் இந்தியா - சீனா மோதல்!

 

இன்று மகளிர் ஜூனியர் ஆசிய ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா ஜூனியர் ஆக்கி மகளிர் அணியும், சீனா மகளிர் அணியும் மோதுகின்றனர். இன்று இரவு 8.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறுகிறது. 

21 வயதுக்குட்பட்டோருக்கான 9வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டு, 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதே போன்று நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் சீனா மகளிர் அணி, தென்கொரியா அணியை எதிர்கொண்டு 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மோதுகின்றன.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!