இன்றே கடைசி தேதி... ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்க மிஸ் பண்ணாதீங்க!

 

மிஸ் பண்ணாதீங்க. இன்று கடைசி தேதி. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களது தகுதியை உறுதி செய்து கொள்வதற்கான 'டெட்'  தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால மறக்காம டெட் தேர்வுக்கு விண்ணப்பிச்சுடுங்க. 

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன்னதாகப் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பணியைத் தொடர இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகிறது.

இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 18-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தொடங்கியது. ஆசிரியர்கள் விண்ணப்பிக்கத் தேவையான பணிச் சான்றுகளை வழங்க மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதில் தாமதம் ஏற்பட்டால் அந்தந்த அதிகாரிகளே பொறுப்பேற்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சான்றிதழ்கள் விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன.

ஜூலை 4 மற்றும் ஜூலை 5, 2026ல் தேர்வுகள் நடைபெற உள்ளன. இன்று மாலையுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைவதால், தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க ஆசிரியர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.