இன்றே கடைசி தேதி... டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மிஸ் பண்ணாதீங்க!

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த சிவில் சேவைகள் தேர்வு-IV  பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவு 11:59 மணியுடன் நிறைவடைகிறது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், தட்டச்சர் உட்பட 46 வகையான பதவிகளில் மொத்தம் 6,574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அனைத்துப் பிரிவினருக்கும் அரசு சார்பில் வயது வரம்பில் தளர்வு (5 ஆண்டுகள் வரை) அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை சுமார் 9.80 லட்சம் தேர்வர்கள் இணையவழி வாயிலாக விண்ணப்பப் பதிவை நிறைவு செய்துள்ளனர்.

விண்ணப்பிக்கக் கடைசி நேரம்: இன்று (நவம்பர் 8) இரவு 11:59 மணி வரை. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின், அவற்றை நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை இணையதளத்தில் திருத்தம் செய்து கொள்ள அவகாசம் வழங்கப்படும். இத்தேர்வு 2027 ஜனவரி 10-ஆம் தேதி (காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை)  முறையில் நடைபெறும்.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள தேர்வர்கள் கடைசி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்க உடனடியாகத் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnpsc.gov.in அல்லது tnpscexams.in வாயிலாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.