undefined

இன்றே கடைசி தேதி... டிகிரி முடித்தவர்களுக்கு பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு!

 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி கூட்டுறவு வங்கியான ஏபி மகேஷ் கூட்டுறவு வங்கி (AP Mahesh Co-operative Urban Bank), 2026-ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கித் துறையில் கால்பதிக்க விரும்பும் பட்டதாரிகளுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி இன்று மார்ச் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி தனது கிளைகளின் விரிவாக்கம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு, தகுதியுள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

இந்த அறிவிப்பின் கீழ், அதிகாரி பிரிவில் உதவி மேலாளர் மற்றும் அதற்கு இணையான பொறுப்புகள், கிளார்க் பிரிவில், வங்கியின் தினசரி செயல்பாடுகளைக் கவனிக்கும் எழுத்தர் பணியிடங்கள் ஆகிய காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன:

வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களின்படி, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது.

பொதுவாக 18 முதல் 28 அல்லது 30 வயது வரை (பணியிடத்தைப் பொறுத்து மாறுபடலாம்). அரசு விதிமுறைப்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான apmaheshbank.com பக்கத்திற்குச் சென்று, 'Careers' என்ற பிரிவின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முதலில் உங்களது அடிப்படைத் தகவல்களைக் கொடுத்துப் பதிவு செய்ய வேண்டும். புகைப்படம், கையெழுத்து மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் நாளைக்குள் (மார்ச் 4) செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பொதுவாக இரண்டு நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்: ரீசனிங், ஆப்டிடியூட், ஆங்கிலம் மற்றும் வங்கி விழிப்புணர்வு தொடர்பான கேள்விகள் ஆன்லைன் தேர்வு மூலம் கேட்கப்படும். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.