இன்றே கடைசி நாள்... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி வாய்ப்பு... ஏப்ரல் 23ல் தேர்தல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பிக்க இன்று மார்ச் 26, வியாழக்கிழமை கடைசி நாள் எனத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேர்தல் விதிகளின்படி, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளுக்கு (ஏப்ரல் 6) பத்து நாட்களுக்கு முன்பாக வரை மட்டுமே புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். அதனால் இன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
படிவம்-6 (Form-6) மூலம் அந்தந்தப் பகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்/செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலின்படி தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இறுதிப் பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகு, இதுவரை சுமார் 3.20 லட்சம் பேர் புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இன்று மார்ச் 26 வரை பெறப்படும் தகுதியான விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் 'துணை வாக்காளர் பட்டியல்' வெளியிடப்படும்.
தேர்தல் முக்கியத் தேதிகள்:
வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: மார்ச் 30, 2026.
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 6, 2026.
வாக்குப்பதிவு: ஏப்ரல் 23, 2026.
வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை voters.eci.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெயர் இல்லாதவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே இந்தத் தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியும்.