undefined

இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள்!!

இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள்!!
 


தமிழகத்தில் இன்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா பல இடங்களில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை அளிக்கப்பட்டது. 


எம்ஜிஆரின் 105 வது பிறந்த நாள் விழாவை பல்வேறு கட்சிகளும், அரசியல் தலைவர்களும் அவரவர் பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், கிண்டியில்  தமிழக அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பல அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.