இன்று தமிழகத்தில் 6 இடங்களில் PF, ESI குறைதீர்ப்பு முகாம்... வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க!
Nov 27, 2026, 06:06 IST
தொழிலாளர்களின் பிஎஃப் (PF) மற்றும் இஎஸ்ஐ (ESI) தொடர்பான குறைகளுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில், இன்று தமிழகத்தில் 6 இடங்களில் சிறப்புக் குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, சிவகாசி மற்றும் பழநி ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இன்று காலை 6 மணிக்குத் தொடங்க உள்ள இந்தச் சிறப்பு முகாம்களில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து மனு அளித்துப் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் பங்கேற்க விரும்பும் தொழிலாளர்கள் https://t.ly/nPTt என்ற இணையதளம் மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கூட்ட நெரிசலைத் தவிர்த்துக் குறைகளுக்கு விரைவான தீர்வு பெற முடியும்.