நாளை கடைசி தேதி... உடனடியாக ஆதார் அப்டேட் பண்ணுங்க... இல்லைன்னா பெரிய சிக்கல்!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இது குறித்து பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை தகவல்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரை ஆதார் அட்டையை அப்டேட் செய்யாதவர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் ஆதார் அட்டையை அப்டேட் செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆதார் அட்டையைப் பெற்று 10 வருடங்களைக் கடந்தவர்கள் தங்களது அட்டையை அப்டேட் செய்யவேண்டியது அவசியமாகிறது. அப்படி ஆதார் அட்டையை அப்டேட் செய்ய தவறினால் உங்கள் ஆதார் தகவல்கள் செல்லுபடியாவதில் பல சிக்கல்கள் எழ வாய்ப்புகள் அதிகம். அரசு சார்ந்த திட்டங்களின் பலனை பெறுவதில் சிக்கல் ஏற்படுக்கூடும்.
10 வருடங்களுக்கு முன் ஆதார் அட்டையைப் பெற்ற பயனர்கள், தங்களின் ஆதார் அட்டை தகவலை அப்டேட் செய்து புதுப்பித்துக் கொள்ளும்படி UIDAI அறிவுறுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, காலகெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் நாளை டிசம்பர் 14ம் தேதி வரை பொதுமக்கள் தங்களது ஆதார் தகவலை இலவசமாக அப்டேட் செய்து கொள்ள சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இலவச அப்டேட் வாய்ப்பை, 10 வருட பழைய ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி புதிய ஆதார் அட்டை பயனர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், விலாசம் மாற்றம் என திருத்தப்பிழைகளை இலவசமாக செய்துக் கொள்ளலாம்.
இந்த வாய்ப்பு நாளை டிசம்பர் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிற்கும் பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்கும். ஆதார் ஆன்லைன் டவுன்லோட் தரவிற்கு ரூ.30 கட்டணமாகவும், ஆதார் அட்டை முகவரி அப்டேட்டிற்கு ரூ. 25 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, நாளை வரை உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி / வயது, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, புகைப்படம், உறவு நிலை மாற்றம், தகவல் பகிர்வு ஒப்புதல், கண் கருவிழி மற்றும் கைரேகை பயோமெட்ரிக் தகவல்களை பொதுமக்கள் இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!