நாளை கடைசித் தேதி... டிகிரி முடிச்சிருந்தா மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1 லட்சம் வரை சம்பளம் - முழு விபரம்!
மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டேராடூனைச் சேர்ந்த புகழ்பெற்ற வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 'குரூப் சி' பிரிவில் காலியாக உள்ள 91 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசு வேலையைப் பெறலாம்.
பணியிடங்கள் விவரம் (மொத்தம்: 91):
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS): 45 பணியிடங்கள்
டெக்னீஷியன் (Field/Lab Research): 11 பணியிடங்கள்
டெக்னீஷியன் (Maintenance): 09 பணியிடங்கள்
லோயர் டிவிஷன் கிளார்க் (LDC): 08 பணியிடங்கள்
பாரஸ்ட் கார்டு (Forest Guard): 07 பணியிடங்கள்
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்: 04 பணியிடங்கள்
ஸ்டோர் கீப்பர்: 03 பணியிடங்கள்
லைப்ரரி இன்ஃபர்மேஷன் அசிஸ்டெண்ட்: 02 பணியிடங்கள்
ஸ்டெனோகிராபர் கிரேடு-II: 02 பணியிடங்கள்
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பதவிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடுகின்றன:
MTS: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
LDC / ஸ்டோர் கீப்பர் / பாரஸ்ட் கார்டு: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி. (LDC பணிக்கு கம்ப்யூட்டர் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்).
லைப்ரரி இன்ஃபர்மேஷன் அசிஸ்டெண்ட்: ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நூலக அறிவியலில் (Library Science) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்: அறிவியல் பிரிவில் (Science Degree - Botany, Zoology, Forestry, Geology போன்றவை) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் நிரம்பியிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது 27 முதல் 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும் (பதவிகளைப் பொறுத்து மாறுபடும்).
மத்திய அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதிய விவரம்: மத்திய அரசின் 7-ஆவது ஊதியக் குழுவின்படி (7th CPC) மாதச் சம்பளம் வழங்கப்படும்:
MTS: ரூ.18,000 - ரூ.56,900/-
LDC / பாரஸ்ட் கார்டு / டெக்னீஷியன்: ரூ.19,900 - ரூ.63,200/-
லைப்ரரி இன்ஃபர்மேஷன் அசிஸ்டெண்ட் (Level-6): ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை (இதனுடன் மத்திய அரசுப் படிகளும் உண்டு).
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் பின்வரும் மூன்று கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதிப் பட்டியலின்படி தேர்வு செய்யப்படுவர்:
கட்டம்-1: கணினி வழி எழுத்துத் தேர்வு (CBT - புறநிலை வகை வினாக்கள்).
கட்டம்-2: விவரிக்கும் வகை தேர்வு (Descriptive Test - கட்டுரை மற்றும் கடிதம் எழுதுதல்).
கட்டம்-3: பணிக்குத் தேவையான தட்டச்சுத் தேர்வு / உடற்தகுதித் தேர்வு / தொழிற்துறைத் தேர்வு (Skill/Physical/Trade Test).
விண்ணப்பக் கட்டணம்:
பொது / OBC / EWS பிரிவினர்: ரூ.1500/- (விண்ணப்பக் கட்டணம் ரூ.800 + செயலாக்கக் கட்டணம் ரூ.700).
பெண்கள் / SC / ST / மாற்றுத்திறனாளிகள்: ரூ.700/- (விண்ணப்பக் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது; செயலாக்கக் கட்டணம் மட்டும்).
முக்கிய விவரங்கள்:
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 03.06.2026 (இரவு 11:59 மணி வரை)
அதிகாரப்பூர்வ இணையதளம்: fri.icfre.gov.in
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ PDF லிங்க்: FRI Group C Notification 2026
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு, உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.