நாளை சித்திரைக் கனி காணுதல்... பலன்களும், சிறப்பம்சமும் - வசந்தத்தைத் தவற விடாதீங்க!

 

நாளை சித்திரை மாதத்தின் முதல் தேதி. உலகம் முழுவதும்  தமிழ் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. நாளை முதல் உத்தராயண காலத்தில் சூரியனின் பயணத்தில் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் நுழைய உள்ளது. நாளை சித்திரை கனி காணுதல் சிறப்பான நிகழ்வு நடைபெறும். மா, பலா, வாழை என்கின்ற முக்கனிகளும் இக்காலத்தில் கிடைக்கும்.

இன்று, பங்குனி மாதத்தின் கடைசி நாள் இரவே பூஜை அறையில் மாக்கோலமிட்டு பின் ஒரு பெரிய தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் எடுத்து வைக்கப்படுவது வழக்கம்.  

தேங்காய் வெற்றிலை, பாக்கு, வாசனை மலர்கள் கொண்டும், கொன்றை மலர்களாலும்  அலங்கரிக்கலாம். அத்துடன் பணம் மற்றும் காசுகள், முகம் பார்க்கும் கண்ணாடி, உப்பு, சர்க்கரை, அரிசி, பருப்பு முதலானவற்றை எடுத்து  வைப்பர்.

 காலையில் எழுந்தவுடன் முதலில் சென்று பூஜை அறையில்  மங்கலப்பொருட்களில் கண் விழிக்க வேண்டும். லட்சுமி கடாட்சம் நிறையும். வருடம் முழுவதும் மகிழ்ச்சி நிறையும் என்பது ஐதிகம். இதுவே சித்திரை கனி  காணுதல். மனதை ஒருமுகப்படுத்தி, வேண்டுதல் செய்ய நிச்சயம் பலன் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். இந்த வருடத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.