undefined

நாளை முழு கடையடைப்பு போராட்டம்... நெல்லையில் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!

 

நாளை அக்டோபர் 7ம் தேதி திருநெல்வேலி  மாவட்டம் முழுவதுமாக காலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரையில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக நெல்லை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சி பகுதியில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்கு, லாரிகள் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 

ஆனால் தற்போது லாரிகள் மாநகரப் பகுதிக்குள் வர மாவட்ட கலெக்டர் தடை விதித்தது தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நெல்லையில் நாளை அக்டோபர் 7ம் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?