நாளை விசிக மாநாடு... உளுந்தூர்பேட்டையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 'தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு' பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

விசிக சார்பில் உளுந்தூர்பேட்டையில் நாளை ஆகஸ்ட் 17 ம் தேதி மிகப்பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநாட்டை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு மதுக்கடைகளை நாளை ஒருநாள் மட்டும் மூட கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், நகரில் சட்டம் - ஒழுங்கைச் சீராகப் பராமரிக்கவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவலத்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.