சைமா விருதுகளில் 6 விருதுகளைக் குவித்து சாதனை படைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’!

 

நடப்பாண்டுக்கான சைமா விருது வழங்கும் விழாவில், சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. ஈழத் தமிழர்களின் வாழ்வியலையும் அகதிகளின் துயரங்களையும் யதார்த்தமாகப் பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

சைமா விருது விழாவில் இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த நடிகர் (சசிகுமார்), சிறந்த நடிகை (சிம்ரன்), சிறந்த பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகர் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளில் மொத்தம் 6 விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.

ஈழ அகதிகளின் வாழ்வியலைத் திரையில் வலிமையோடு பதிவு செய்த இந்தப் படமும், அதில் நடித்த நடிகர், நடிகையரின் சிறப்பான நடிப்பும் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடையேயும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.